அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தில் ஒல்லாந்து சந்தேகம்!

Wednesday, August 31st, 2016

அட்லாண்டிக் வர்த்தக பேச்சுவார்த்தை குறித்த ஒப்பந்தம் இந்த வருட இறுதிக்குள் ஏற்படும் என தான் நம்பவில்லை என ஃபிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந்து தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான அட்லாண்டிக் வர்த்தக முதலீட்டு கூட்டணிக்கான பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவில்லை என்றும் ஒபாமாவின் பதவிக் காலம் முடியும் முன்பாக பேச்சுவார்த்தை முடிவுக்கு வருவதற்கான நிலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் சசிலியா மால்ஸ்டோம், இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்ற கருத்தையும் மறுத்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக பொறுப்பாளர் மைகேல் ஃபிரோமன், பேச்சுவார்த்தையில் நல்லதொரு முன்னேற்றம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts: