அடுத்த மாதம் ஜப்பானில் பாராளுமன்ற தேர்தல்!

Friday, September 29th, 2017

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்ததை தொடர்ந்து பாராளுமன்றத்தின் கீழவை கலைக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதம் 22ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியா மீது உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இதற்கிடையில், வடகொரியாவுக்கு எதிரான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நடவடிக்கை குறித்து நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 44 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.

உலகப் பொருளாதாரத்தில் மிகவும் சக்திவாய்ந்த மூன்றாவது பெரிய நாடாக அறியப்படும் ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷின்சோ அபே மீண்டும் பதவி ஏற்பார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related posts: