அடுக்குமாடி கட்டிடத்தில் ஹெலிகாப்டர் மோதி விபத்து – விமானி உயிரிழப்பு!

Wednesday, June 12th, 2019

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில் இடம்பெற்ற முதற்கட்ட விசாரணையில், மோசமான வானிலை காரணமாக விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் மோதியவுடன் கட்டிடத்தில் தீப்பற்றியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி உயிரிழந்துள்ளதுடன் கட்டிடத்தில் இருந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.