அகதியை எட்டி உதைத்த ஹங்கேரி பெண் செய்தியாளருக்கு 3 ஆண்டுகள் நன்னடத்தை தண்டனை!

Saturday, January 14th, 2017
ஹங்கேரி நாட்டை சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் ஹங்கேரிசெர்பியா எல்லையில் அகதிகளை எட்டி உதைப்பதும், தடுக்கி விழவைப்பதுமமான படங்கள் வெளியானதை தொடர்ந்து, ஒழுங்கற்ற நடவடிக்கைமூலம் மூன்று ஆண்டு நன்னடத்தை தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்..
2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீஸ் பாதுகாப்பு வட்டத்தை மீறி குடியேறிகள் வெளியேறியதை பெட்ரா லாஸ்லோ படம்பிடித்து கொண்டிருந்தார்.தப்பியோடிய குடியேறிகளில் இருவரை பெட்ரா எட்டி உதைத்தது படம் பிடிக்கப்பட்டது. அதில், ஒரு இளம்பெண்ணும் அடங்குவார்.
பின்னர், ஒரு குழந்தையை சுமந்து சென்ற நபர் ஒருவரையும் தடுக்கி விழ வைத்தது போல் காட்சிகள் காட்டின.இந்த தண்டனை குறித்து மேல்முறையீடு செய்யப்போவதாக பெட்ரா கூறியுள்ளார்..சமூக வலைத்தளங்களில் பெட்ராவின் இந்த நடவடிக்கைகள் வேகமாக பரவியதை தொடர்ந்து, வலதுசாரி தொலைக்காட்சி சேனலான என் 1 டிவி அவரை பணிநீக்கம் செய்தது.
625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: