அகதிகள் மற்றும் குடியேறிகள் நிலை பற்றிய ஐ.நா மாநாடு ஆரம்பம்!

நியூயோர்க் நகரில் அகதிகள் மற்றும் குடியேறிகள் நிலை பற்றிய ஐக்கிய நாடுகளின் முக்கிய உச்சி மாநாடு ஒன்று தொடங்கியுள்ளது.
இச்சூழலில், ஒரு நல்ல எதிர்காலம் அமையும் என்ற தங்களின் கனவு பொய்துவிட்டதாக குடியேறிகள் சார்பாக கலந்து கொண்ட பிரதிநிதி குழு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. குடியேறிகள் கடன் சுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கடத்தப்பட்டு, அடிமை வாழ்க்கைக்கு ஏமாற்றப்படுவதாகவும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் சர்வதேச குடியேறிகளுக்கான கூட்டணியின் தலைவர் ஈனி லெஸ்டாரி அண்டாயனி அடி தெரிவித்துள்ளார்.
அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்கள், அகதிகள் நெருக்கடி நிலைக்கு மேலும் மேம்பட்ட மனிதாபிமான உதவிகளையும், சிறந்த ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளனர். ஐ.நாவின் பொது செயலாளர் பான் கீ மூன், இந்த உறுதி மொழியை இறுதிவரை கடைப்பிடிக்குமாறு உலக தலைவர்களை வலியுறுத்தி உள்ளார்.
Related posts:
|
|