அகதிகள் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் – சீனா !

மத்தியகிழக்கில் உள்ள அகதிகள் நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
லெபனானில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது லெபனான் வெளியுறவு அமைச்சர் கெப்ரான் பசிலும் வாங் யீயுடன் கலந்துகொண்டுள்ளார்.
சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு லெபனான் உள்ளிட்ட பல நாடுகள் இருப்பிடம் அளித்து உதவி புரிந்து வருவதாக தெரிவித்த வாங் யீ அகதிகளை குடியேற்றவாசிகளுடன் இணைக்க முடியாது எனவும் அவர்களுக்கு உதவி புரிய சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் சிரியாவின் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என வாங் யீ மேலும் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.ஐ.நாவின் திட்டத்திற்கு அமைய அகதிகளுக்கு இருப்பிடம் அளித்து உதவி புரியும் நாடுகளுக்கு சீனா மனிதாபிமான உதவிகளை வழங்கி உதவி புரிந்து வருதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் மத்தியகிழக்கில் உள்ள அகதிகள் தங்களது வீடுகளுக்கு மீண்டும் செல்லும் வகையில் அவர்களுக்கு உதவி புரிய சர்வதேச சமூகத்துடன் சீனா கை கோர்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|