அகதிகளை தங்கவைக்க 3000 ஏக்கர் வனத்தை அழிக்கிறது பங்களாதேஷ்!

59d702de5823d-IBCTAMIL Saturday, October 7th, 2017

மியன்மார் ரோஹிங்கியா அகதிகளுக்கு தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்காக உலகிலேயே மிகப்பெரிய அகதிகள் நிலையமொன்றை அமைப்பதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக 3000 ஏக்கர் காடுகளை அழிப்பதற்கும் பங்களாதேஷ் முடிவொன்றை எடுத்துள்ளது.

8 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷிற்கு புகலிடம் தேடிச் சென்றிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அவர்களை தற்காலிகமாக தங்கவைப்பதற்காக கொட்டில்களை அமைப்பதற்கு கொக்ஸ் பஸார் பகுதியிலுள்ள 1000 ஏக்கர் வனப்பகுதியில் மரங்களை வெட்டி துப்பரவு செய்யும் நடவடிக்கையில் பங்களாதேஷ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரோஹிங்கியா அகதிகளை தங்கவைப்பதற்காக 2000 ஏக்கர் வனப்பகுதியை பங்களாதேஷ் அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது.

இந்த பகுதி இவ்வளவு பெருந்தொகையான அகதிகளை தங்கவைப்பதற்கு போதாத காரணத்தினால் மேலும் 1000 ஏக்கர் பகுதியை அந்நாட்டு அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் அடைக்கலம் தேடிச்சென்றுள்ள ரோஹிங்கியா அகதிகளில் 45 ஆயிரம் சிறுவர்களும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களும் கொக்ஸ் பஸாரில் இருப்பதாக கூறப்படுகிறது.