அகதிகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்?

Sunday, October 30th, 2016

தஞ்சம் கோருபவர்கள் படகு மூலம் பயணம் செய்து அவுஸ்திரேலியாவை அடைவதை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு ஒரு கடுமையான புதிய சட்டத்தினை முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு வருகை புரியவோ அல்லது குடியேறுவதற்கோ அனுமதிமறுக்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில் நுழையும் முயற்சிகள் இறுதியில் வீணாகி விடும் என்று ஆள் கடத்தல் செய்யப்படுவார்களால் அனுப்பப்படுபவர்கள் தெரிந்து கொண்டதால், ஆள் கடத்தல் செய்யும் குற்றவியல் வர்த்தகத்தை இந்த புதிய சட்டம் தடுத்து நிறுத்தும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.

பப்புவா நியூ கினி மற்றும் பசிபிக் நாடான நரு ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவால் நடத்தப்பட்டு வரும் கடல் குடியேற்ற தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள ஏறக்குறைய 3000 வயது வந்த அகதிகளை இந்த சட்டம் நேரடியாக பாதிக்கும்.

ஆஸ்திரேலியாவின் சர்வதேச கடமைகளை முன்மொழியப்பட்ட இந்த புதிய சட்டம் மீறுகிறதா என்பதனை தாங்கள் கருத்தில் கொள்ளப் போவதாக ஆஸ்திரேலியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கூறியுள்ளது.

 _92151514_detention

Related posts: