அகதிகளை ஏற்றது ஸ்பெயின்!

மத்தியதரை கடலில் மீட்கப்பட்ட ஏதிலிகளை இத்தாலி மற்றும் மோல்டா ஏற்க மறுத்த நிலையில் அவர்களை ஏற்க ஸ்பெயின் முன்வந்துள்ளது.
கடந்த வார இறுதியில் மத்தியதரை கடலில் லிபியாவிற்கு அருகே 630 ஏதிலிகள் மீட்கப்பட்டனர்.
சர்வதேச ஏதிலி சட்டத்தை உதாசீனம் செய்தஇ இத்தாலியின் புதிய அரசாங்கம்இ இவர்களுக்கு இத்தாலிய மண்ணில் கால்பதிக்க அனுமதிக்க முற்றாக மறுத்திருந்தது. இந்த நிலையில் இன்று அவர்களை ஸ்பெயின் ஏற்க முடிவு செய்துள்ளது.
அதன்படி அவர்கள் ஸ்பெயினின் வலன்சிய துறைமுகத்தை வந்தடையவுள்ளனர்.அவர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாரிய பதாதைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் ஏதிலிகளுக்கு உதவ தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று ஸ்பெயினை வந்தடையும் அவர்களுக்குஇ புதிதாக பதவி ஏற்றுள்ள ஸ்பெயினின் புதிய சோஷலிச அரசாங்கம் இலவச மருத்துவ சேவையினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏதிலிகள் தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் உண்மைத்தன்மைக்கு ஏற்ற வகையில் ஏதிலி அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அநாதரவான இவர்கள் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவதுடன் மனித உரிமைகள் பேணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செய்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
மீட்கப்பட்ட ஏதிலிகளில் தனியாக வந்துள்ள 123 சிறார்கள் மற்றும் 7 கர்ப்பிணிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|