U.S. ஓபன் டென்னிஸ் போட்டியில் இசிகர்களுக்கு அனுமதி இல்லை!

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் – ஜூலை 12 ஆம் திகதி வரை நடைபெறுவதாக இருந்தது.
எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் போட்டியை நடத்துவது தொடா்பாக கேள்வி எழுந்தது. இதை அடுத்து இந்த வருட விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது. மே 24 – ஜூன் 7 திகதிகளில் நடைபெறவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. காலி அரங்கில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை யு.எஸ். ஓபன் போட்டி நடைபெறும் என நியூயோர்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ அறிவித்துள்ளார்.
போட்டியில் பங்குபெறும் வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்பில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். யு.எஸ். ஓபன் போட்டியை நடத்தும் யூஎஸ்டிஏ அமைப்பு இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளது.
Related posts:
|
|