T 20 தொடரில் விளையாட அனுமதி மறுப்பு : பாகிஸ்தான் கிரிக்கட் சபை அதிரடி!

பாகிஸ்தான் கிரிக்கட் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 20 க்கு 20 லீக் தொடர்களில் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர்களில் மாத்திரம் விளையாட முடியும்.
பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் விசேட கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 20 க்கு 20 கிரிக்கட் தொடர்கள் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கட் சபை கரிசனை கொண்டுள்ளது.
இதனிடையே குறித்த தொடர்களை நடத்தும் எமிரேட்ஸ் கிரிக்கட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இந்திய தொடருக்கு குமார் தர்மசேனவுக்கு வாய்ப்பு!
17 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடர் இந்தியாவில்!
காற்பந்தாட்ட துறையை வலுவூட்ட நடவடிக்கைகள்!
|
|