T-20 தொடரிலிருந்து பிரபல மேற்கிந்திய வீரர்கள் நீக்கம்!
Saturday, December 16th, 2017நியூசிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து மூன்று பிரபல வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மாலன் சமுவெல், சுனில் நாரேன் மற்றும் அல்சராய் ஜோசப் ஆகியோரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.
வலது கையில் உபாதை ஏற்பட்டுள்ளதால் மாலன் சமுவெல் நீக்கப்பட்டுள்ள நிலையில் , அல்சராய் ஜோசப் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
சுனில் நரேன் தனிப்பட்ட காரணம் காரணமாக இருபதுக்கு இருபது தொடரில் கலந்து கொள்ள முடியாது என அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இருபதுக்கு இருபது போட்டித் தொடர் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சாகச விளையாட்டுக்கள் தொடர்பான தேசிய நியமங்களை வகுக்க நடவடிக்கை!
5 விக்கட்டுக்களால் வென்றது சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி!
இந்திய அணியின் முன்னாள் சகல துறை வீரர் ஓய்வு !
|
|