T-20 உலக கோப்பை : வங்கதேசத்தை போராடி வென்றது ஆஸ்திரேலியா

Tuesday, March 22nd, 2016

சூப்பர் 10′ சுற்றின் 10-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி விளையாட்டரங்கில் நேற்று நடைப்பெற்றது . இதில் ‘குரூப் 2’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் மோதியது.

துடுப்பெடுத்தாட்டத்திற்கு சாதகமான சின்னசாமி மைதானத்தில் நாணயச்சுழற்சியில்  வென்ற ஆஸ்திரேலியா அணித்தலைவர் சுமித் முதலில் பந்து வீச முடிவு செய்தார். வாங்கதேச ஆரம்ப ஆட்டகாரர் சௌமிய சர்கார் 2 ரன்களில் வாட்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு ஆரம்ப ஆட்டகாரரான முகமது மிதுன் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

வாங்களதேச அணி குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட்களை இழந்து 156 ரன்கள் எடுத்தது. கடைசியில் களமிறங்கிய மஹ்மதுல்லா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அந்த அணி 156 ரன்கள் குவிக்க உதவினார். ஆஸ்திரேலியா தரப்பில் லெக்ஸ் பின்னர் ஆடம் ஷாம்பா 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. ஆரம்ப ஆட்டகாரர் வாட்சன் 21 ரன்களில் ஆட்டமிழந்தார் . மற்றொரு ஆரம்ப ஆட்டகாரர் உஸ்மான் கவாஜா அதிரடியாக 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அணித்தலைவர் சுமித் 14 ரன்கள், வார்னர் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் மேக்ஸ்வெல் அதிரடி காட்ட ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை நெருங்கியது. ஆனால் அல் ஹாசன் வீசிய 17 ஓவரில் மேக்ஸ்வேல் 26 ரன்னிலும், ஹாஸ்டிங்ஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழக்க ஆட்டத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஆல்ரவுண்டர் பால்க்னர் 18 வது ஓவரில் 3 பந்தை பவுண்டரிக்கு விரட்ட ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அல் ஹாசன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Related posts: