ROLL BALL உலகக்கிண்ணப் போட்டிக்கு மன்னாரிலிருந்து நான்கு வீரர்கள் பங்களாதேஷிற்கு பயணம்!

Tuesday, February 7th, 2017

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இடம் பெறவுள்ள 4ஆவது ‘ரோல் போல்’ (ROLL BALL ) உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ளுவதற்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து நான்கு வீரர்கள் பங்களாதேஷிற்கு பயணம் செய்யவுள்ளனர்.

டாக்காவில் 4ஆவது தடவையாக நடைபெறும் ‘ரோல் போல்’ போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து 3 யுவதிகள் மற்றும் ஒரு இளைஞர் என 4பேர் பங்கேற்கவுள்ளனர்.

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி யோ.திவ்வியா , மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் எஸ்.அருண், மன்-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஏ.திவ்வியா, மற்றும் மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி எஸ்.அன்ரலின் ஆகிய வீரர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

5-2-720x450

Related posts: