IPL தொடரில் சாதித்த மஹேலவுக்கு பங்களாதேஷ் BPL தொடரின் பயிற்சியாளராக அழைப்பு!
Sunday, May 28th, 2017
இந்தியாவில் நடைபெற்று முடிந்த பத்தாவது ஐபில் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அவருடைய பயிற்சியின் மூலம் மும்பை அணி 2017-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் சாம்பின் கிண்ணத்தை கைப்பற்றி சாதனையும் படைத்தது.
இதைத் தொடர்ந்து ஜெயவர்த்தனேவுக்கு வங்கதேசத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதாவது இந்தியாவில் எப்படி ஐபிஎல் தொடர் நடைபெறுகிறதோ, அதே போன்ற தொடர் அங்கும் பிபிஎல் தொடர் நடைபெறுகிறது. இந்தாண்டிற்கான இத்தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் குல்னாடைடன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஜெயவர்த்தனே அழைக்கப்பட்டுள்ளார். இதற்கு அவரும் ஒப்புக் கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு குல்னாடைடன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|