IAAF வழங்கும் ஆறாவது சிறந்த தடகள வீரர் விருதினை தனதாக்கினார் உசேன் போல்ட்!

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த மின்னல் மனிதர் உசைன் போல்ட் இந்த ஆண்டிற்கான ஆண்கள் பிரிவில் சிறந்த தடகள வீரர் என்ற விருதை பெற்று அசத்தியுள்ளார்.
தடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் IAAF World Athlete என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.அதே போன்று இந்த ஆண்டிற்கான சிறந்த தடகள வீரர்களுக்கான விருது வழங்கும் விழா Monaco வில் உள்ள Fairmont என்ற பிரபல ஹொட்டலில் நடைபெற்றது. இதில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது இந்த ஆண்டில் ஆண்களுக்கான சிறந்த தடகள வீரர் உசைன் போல்ட் என அறிவிக்கப்பட்டவுடன் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இது அவருக்கு IAAF வழங்கும் ஆறாவது சிறந்த தடகள வீரர் விருது ஆகும்.
Related posts:
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: தொடரை வென்றது ஆஸி!
கோஹ்லியை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை -கும்ப்ளே
மெய்வன்மை போட்டிகளை ஜனவரி 30 ஆம் திகதிக்குள் நடத்திமுடிக்குமாறு அறிவிப்பு!
|
|