I.P.L தொடர்: மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் !

Monday, May 28th, 2018

ஷேன் வாட்சனின் அதிரடிச் சதத்துடன் நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சனும் ஃபாப் டு பிளஸிஸும் களமிறங்கினர். முதல் ஓவரையே மெய்டனாக வீசி அசத்தினார் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார்.

முதல் ஐந்து ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சென்னை அணி. பவர்பிளேவின் கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தது சி எஸ் கே.சித்தார்த் கவுல் வீசிய ஏழாவது ஓவரில் வாட்சன் ஒரு சிக்சரும், ரெய்னா தனது பங்கிற்கு இரு பௌண்டரி விளாச 16 ரன்கள் வந்தது.

சித்தார்த் வீசிய ஒன்பதாவது ஓவரிலும் 16 ரன்கள் குவித்தது சிஎஸ்கே. பத்து ஓவர்கள் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 80/2 சென்னை அணி மளமளவென ரன்கள் குவித்ததையடுத்து கேன் வில்லியம்சன் தனது பௌலர்களை மாற்றிக்கொண்டே இருந்தார். எனினும் உரிய பலன் கிடைக்கவில்லை.

சந்தீப் ஷர்மா வீசிய 14-வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பௌண்டரிகள் விளாசினார் 36 வயது ஷேன் வாட்சன். அந்த ஒரு ஓவரில் மட்டும் 27 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. சந்தீப் ஷர்மா வீசிய அந்த ஓவரில் ஆட்டத்தின் போக்கு முற்றிலுமாக சிஎஸ்கேவுக்கு சாதகமாக மாறத்துவங்கியது.

பிராத்வெயிட் வீசிய 14-வது ஓவரில் ரெய்னா அவுட் ஆனார். ஆட்டத்தில் கடும் நெருக்கடிக்கு இடையே 15-வது வரை வீசிய ரஷீத்கான் வெறும் ஒரு ரன் மட்டுமே கொடுத்தார்.எனினும் சென்னை அணியின் வெற்றிக்கு வேறு எந்த தடைகளும் இருக்கவில்லை

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல வேண்டுமானால் சேஸிங்கில் 179 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு வைத்தது சன் ரைசர்ஸ் அணி .

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 2018 சீசனுக்கான இறுதியாட்டத்தில் விளையாடி வருகின்றன.டாஸ் வென்ற சென்னை அணியின் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி ஃபீலடிங்கை தேர்ந்தெடுத்தார்.

சன் ரைசர்ஸ் அணித்தரப்பில் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரின் முதல் பந்தையே நோ பாலாக வீசினார் தீபக் சாஹர்.லுங்கி இங்கிடி வீசிய இரண்டாவது ஓவரில் கோஸ்வாமி ரன் அவுட் ஆனார்.

பவர்பிளேவின் நான்காவது ஓவரை மெய்டனாக வீசினார் இங்கிடி. முதல் நான்கு ஓவர்களில் ஒரு பந்தை கூட எல்லைக்கோட்டுக்கு விரட்டவில்லை ஹைதராபாத் அணி.

பவர்பிளே முடிவில் 42 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத். ஜடேஜா பந்தில் ஷிகர் தவான் விக்கெட்டை பறிகொடுத்தாலும் சன் ரைசர்ஸ் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் பொறுப்பாக விளையாடினார். ஆனால், கரன் சர்மா பந்தில் ஸ்டம்பிங் முறையில் வீழ்ந்தார்.

ஷகிப் சிறிது நேரம் அதிரடியாக விளையாடிய பிறகு 23 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இறுதிக்கட்ட ஓவர்களில் கார்லோஸ் பிராத்வெயிட் மற்றும் யூசூஃப் பதான் சிறப்பாக விளையாடி சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுக்க உதவினர்.

பிராத்வெயிட் 11 பந்தில் 21 ரன்களும் யூசூஃப் பதான் 25 பந்தில் நான்கு பௌண்டரி இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 45 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணியில் தீபக் சாஹர் மற்றும் இங்கிடி சிறப்பாக பந்து வீசினர். பிராவோ 4 ஓவர்களில் 46 ரன்கள் கொடுத்தாலும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஆட்டத்தின் 4 வது ஓவரில் டுபிளசிஸ் அவுட்டானார். 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.

வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.11-வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த வாட்சன் தனது அரை சதத்தை பதிவுசெய்தார்.

இந்த ஓவரில் சென்னை அணிக்கு 2 சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது.12வது ஓவரை பிராத்வைட் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது.

13வது ஓவரில் சென்னை ஒரு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.14-வது ஓவரை பிராத்வைட் வீசினார். மூன்றாவது பந்தில் சுரேஷ் ரெய்னா அவுட்டானார்.

இவர் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து அம்பதி ராயுடு களமிறங்கினார். அப்போது சென்னை அணி வெற்றி பெற 5 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டது.

இறுதியில், சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.வாட்சன் 117 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

Related posts: