BPL இருபதுக்கு இருபது தொடர் – திசர பெரேரா அதிரடி!
Monday, January 14th, 2019BPL இருபதுக்கு இருபது தொடரின் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் Chittagong Vikings மற்றும் Comilla Victorians அணிகள் மோதின.
Chittagong Vikings அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய திசர பெரேரா சிறப்பாக துடுப்பெடுத்தாடி 26 பந்துகளில் 74 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இதற்கமைய Chittagong Vikings அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கட்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்குதுடுப்பெடுத்தாடிய Comilla Victorians அணி இறுதி ஓவரில் 06 விக்கட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
குறித்த போட்டியில் திசர பெரேரா வேகமாக துடுப்பெடுத்தாடி 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன் இதில் 8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 3 நான்கு ஓட்டங்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அஸ்வின் மட்டுமே தலைசிறந்த சுழல்பந்து வீரர் - முரளிதரன்!
சிறிலங்கா கிரிக்கட்டின் தற்போதைய முகாமையாளருக்கு பதிவு உயர்வு!
வேம்படி பெண்கள் தேசியச் சம்பியன்!
|
|