95 ஓட்டங்களால் பங்களாதேஷை வென்றது இந்திய அணி வெற்றி.!

Wednesday, May 29th, 2019

உலக கிண்ண கிரிக்கட் தொடரை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் ஒருநாள் பயிற்சி போட்டி ஒன்றில்  இந்திய அணி 95 ஓட்டங்களால்  வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 359 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் மகேந்திர சிங் தோனி 113 ஓட்டங்களையும் லோகேஸ் ராஹூல் 108 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்

இந்த நிலையில், 360 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஸ் அணி, 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 264 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது

Related posts: