9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த கிரிக்கெட் அணி!

Sunday, February 24th, 2019

உள்ளூர் அணி ஒன்று வெறும் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் அந்த அணியின் 9 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள்.

புதுச்சேரியில் நடந்த மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேச பெண்கள் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மிசோரம் அணி வீரர்கள் வெறும் 6 ரன்களை மட்டும் எடுத்தனர்.

முதலில் பேட்டிங் செய்த மிசோரம் 13.5 ஓவர்கள் விளையாடி வெறும் 9 ரன்கள் மட்டும் தான் எடுத்தது.

அதுவும் மிசோரம் அணியின் 5வதாக களமிறங்கிய அபூர்வா பரத்வாஜ் 6 ரன்கள் எடுத்தார். மற்ற 9 பேட்ஸ் உமன்களும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

25 பந்துகளை எதிர்கொண்ட அபூர்வா பரத்வாஜ் 6 ரன்களை எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி அடங்கும். மற்ற 3 ரன்கள் மத்திய பிரதேச அணி பவுலர்களால் உதிரி ரன்களாக கிடைத்தது.

10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மத்திய பிரதேச அணி ஒரு ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

Related posts: