8 தொடர்களை வென்ற இந்தியா

Wednesday, December 20th, 2017

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிம்பாப்வேக்கு எதிரான தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றது. அதில் இருந்து இந்திய அணி தொடரை இழக்காமல் தொடர்ச்சியாக 8-வது தொடரை வென்று சாதனை புரிந்தது.

இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக தலா 2 முறை வென்று இருந்தது. இந்த 8 தொடரில் 3 தொடர் வெளிநாட்டில் (சிம்பாப்வே, மேற்கிந்தியா, இலங்கை) கைப்பற்றியது. மீதியுள்ள 5 தொடரை சொந்த மண்ணில் வென்றது.

இந்திய அணி இதற்கு முன்பு 6 ஒருநாள் தொடரை வென்றதே (நவம்பர் 2007 – ஜூன் 2009) சிறப்பான நிலையாகும். மேற்கிந்திய அணி தொடர்ச்சியாக 14 தொடரை (1980-1988) வென்ற இருக்கிறது.

Related posts: