7 வருடங்களின் பின்னர் பங்களாதேஸில் அரங்கேறவுள்ள முத்தரப்புத்தொடர்

Saturday, December 16th, 2017

 வருகின்ற வருடம் ஆரம்பத்தில் பங்களாதேஸ் உட்பட ஸ்ரீலங்கா மற்றும் சிம்பாவே அணிகளுடன் முத்தரப்பு தொடர் இடம்பெறவுள்ளது. கடந்த 2010ம் ஆண்டிற்கு பின்னர் பங்களாதேஸில் இடம்பெறும் முத்தரப்புத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ம் ஆண்டளவில் முத்தரப்புத்தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோது அதில் ஸ்ரீலங்கா கிண்ணம் வென்றிருந்தது. வருகின்ற ஆண்டில் 15ம் திகதி குறித்த முத்தரப்புத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. 13ம் திகதி சிம்பாவே அணி பங்களாதேஸின் பதினொருவர் கொண்ட அணியோடு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும், முதற்போட்டி 15ம் திகதி டாக்கவில் சிம்பாவே பங்களாதேஸ் மோதுகின்றன. ஒவ்வொரு அணிகளும் லீக் சுற்றில் இரண்டு தடவைகள் பலப்பரீட்சை நடாத்துவதோடு, இறுதிப்போட்டி ஜனவரி 27ல் நடைபெறும். தொடர்ச்சியாக 7 நாட்கள் நடைபெறும் இந்த, அனைத்து போட்டிகளும் இரவு நேரத்திலேயே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

இந்த முத்தரப்புத்தொடர் முடிவடைந்தது, இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ரீ20 தொடரில் பங்களாதேஸ் அணியை சந்திக்கவுள்ளது. முதல் டெஸ்ட் முதல் டெஸ்ட் ஜனவரி 31 சிட்டாங்கோங்கிலும், இரண்டாவது டெஸ்ட் பெரவரி 8ல் டாக்காவிலும் இடம்பெறுவதோடு 15 மற்றும் 18ம் திகதிகளில் ரீ20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

பங்களாதேஸ் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் புதிய பயிற்றுவிப்பாளரின் கீழ் சவாலாக எதிர்கொள்ளும் என்பது ஐயமில்லை.

Related posts: