66 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் நபோலி வீரர் கொன்ஸாலோ

Tuesday, May 17th, 2016

இத்­தாலி லீக் (சீரி ஏ) கால்­பந்து போட்­டியில் ஒரு தொடரில் அதிக கோல­டித்­த­வ­ரான குன்னார் நோர்­தலின் 66 ஆண்­டு­கால சாத­னையை முறி­ய­டித்­துள்ளார் நபோலி வீரர் கொன்­ஸாலோ ஹிகுவெய்ன்.

இத்­தாலி லீக்கில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற ஆட்­டத்தில் புரோ­ஸினன் அணிக்கு எதி­ராக ஹெட்ரிக் கோல் அடித்­ததன் மூலம் இந்த தொடரில் 36 கோல்­களை எட்­டிய கொன்­ஸாலோ, நோர்தலினுடைய சாத­னையை முறி­ய­டித்தார்.

முன்­ன­தாக 1949/50 பருவ காலத்திற்கான தொடரில் ஏசி மிலன் அணிக்­காக விளை­யா­டிய சுவிட்ஸர்­லாந்தின் நோர்தல் 35 கோல்­களை அடித்­ததே சாத­னை­யாக இருந்தது.கொன்ஸாலோவின் ஹெட்ரிக் கோல் மூலம் 4–-0 என்ற கோல் கணக்கில் புரோ­ஸினன் அணியைத் தோற்­க­டித்த நபோலி அணி, இந்தத் தொடரில் 2-ஆவது இடத்தைப் பிடித்தது.

Related posts: