51வது ஹாட்ரிக் கோல்: மெஸ்சி அபாரம்!

Wednesday, March 20th, 2019

லா லிகா கால்பந்து தொடரில் மெஸ்சியின் ஹாட்ரிக் கோலால் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸ் அணியை வீழ்த்தியது.

அர்ஜெண்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, பார்சிலோனா என்ற கிளப் அணியில் விளையாடி வருகிறார். பார்சிலோனா-ரியல் பெட்டிஸ் இடையிலான போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மெஸ்சி அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் முதல் கோலை ‘ப்ரீ ஹிக்’ மூலம் அடித்த மெஸ்சி, 45+2வது நிமிடத்தில் 2வது கோலை பதிவு செய்தார்.

இதன்மூலம் பார்சிலோனா அணி முதல் பாதி நேரத்தில் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. பின்னர் 2வது பாதியில் 63வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் மற்றொரு வீரர் சுவாரஸ் ஒரு கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து, 82வது நிமிடத்தில் ரியல் பெட்டிஸ் அணி வீரர் லோரென் மொரோன் கோல் அடித்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் மெஸ்சி 3வது கோல் அடித்தார்.

இறுதியில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் மெஸ்சி அடித்த ஹாட்ரிக் கோல், அவருக்கு 51வது ஹாட்ரிக் கோல் ஆகும்.

Related posts: