50 பேரை காணவில்லை – தேடுதலில் பொதுநலவாய போட்டி ஏற்பாட்டுக்குழு!

Friday, May 25th, 2018

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த மாதம் 4-ம் திகதி முதல் 15-ம் திகதி வரை பொதுநலவாய விளையாட்டுவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 6600 வீரர்கள் மற்றும் அணி பயிற்சியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறித்த போட்டிக்காக கோல்ட் கோஸ்ட் சென்றவர்களில் 50 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அவுஸ்திரேலியாவில் சுற்றிக் கொண்டிருக்கலாம். அதேபோல் சிலர் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சர் டுட்டோன் கூறுகையில் ‘‘கோல்ட் கோஸ்ட் பொதுநலவாய போட்டிக்கு வந்தவர்களில் 190 பேர் அகதிகள் விசா கேட்டுள்ளார்கள். 50 பேரை காணவில்லை. அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. அவர்களை கண்டுபிடித்து, குடியேற்ற தடுப்புக்காவலில் வைத்து, நாடு கடத்தப்படுவார்கள்’’ என்றார்.

பொதுநலவாய போட்டிக்கு செல்பவர்கள் மாயமாவது இது புதிதல்ல. 2006-ம் அண்டு மெல்போர்ன் 2002 மான்செஸ்டர், 2014 கிளாஸ்கோ பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் டசின் கணக்கில் மாயமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: