5 ஆவது சதத்தினை பெற்ற தனஞ்ஜய டி சில்வா !
Saturday, August 24th, 2019இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு பி. சரா ஓவல் விளையாட்டரங்கில் தாமதமாக நேற்று முன்தினம் ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 244 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்த போட்டியில் தனஞ்ஜய டி சில்வா டெஸ்ட் போட்டிகளில் தனது 5 ஆவது சதத்தினை பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணி சார்பாக தனஞ்ஜய டி சில்வா 109 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 65 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக டிம் சோத்தி 4 விக்கெட்டுக்களையும் டெரென்ட் பௌட் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதேவேளை, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 1 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|