49-வது பட்டத்தை வென்று சாதனை படைத்த நடால்!

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் நடப்பு சாம்பியனான நிஷிகோரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்பெயினில் நடந்த பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியனான நிஷிகோரியை (ஜப்பான்) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த பட்டத்தை ரபெல் நடால் வெல்வது 9-வது முறையாகும். களிமண் தரையில் நடந்த போட்டியில் ரபெல் நடால் வென்ற 49-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் களிமண் தரையில் அதிக பட்டம் வென்ற அர்ஜென்டினாவை சேர்ந்த குல்லெர்மோ விலாஸ்சின் சாதனையை (49 பட்டங்கள்) சமன் செய்தார்.
Related posts:
குசலுக்கான செலவை ஐ.சி.சி.செலுத்தாது?
2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர்!
ரங்கன ஹேரத்தை வாழ்த்திய டெண்டுல்கர்
|
|