45 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி!

Tuesday, April 30th, 2019

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரின் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

டேவிட் வோர்னர் 56 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பதிலளித்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி கண்டது.

ஆட்ட நாயகனாக டேவிட் வோர்னர் தெரிவானார்.

இதேவேளை, உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான அணியில் இணைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானிய வீரர் சொஹைப் மலிக்கிற்கு அந்த நாட்டின் கிரிக்கட் சபை 10 நாட்கள் விடுமுறை வழங்கியுள்ளது.

அவரது தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக இந்த விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. எனினும் உண்மையான காரணம் கூறப்படவில்லை.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தவாரம் நடைபெறவுள்ள 20க்கு20 கிரிக்கட் போட்டி மற்றும் முதலாவது ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் பாகிஸ்தான் அணியுடன் இணைந்து கொள்வார் என்றும் நம்பப்படுகிறது.

Related posts: