400 மீட்டர் ஓட்ட போட்டியில் தென்னாப்பிரிக்க வீரருக்கு தங்கம்!

Thursday, August 10th, 2017

உலக தடகள சாம்பியன் ஷிப் தொடரில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்ட போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் வேன் நியரிக் (van Niekerk) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகிறதுஇதில் நேற்று இடம்பெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் வேன் நியரிக் ஓட்ட தூரத்தை 43.98 வினாடியில் கடந்து முதலிடம் பெற்றார்.

இதனிடையே, 800 மீட்டர் ஓட்ட போட்டியில் பிரான்ஸ் வீரர் பிரே அம்ரொய்ஸ்  தங்கப் பதக்கம் வென்றார்.அவர் குறித்த தூரத்தை 1 நிமிடம் 44.67 வினாடியில் கடந்தார்.2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப் பிடித்த போலந்து மற்றும் கென்யா வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

Related posts: