4 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி!

Thursday, August 9th, 2018

இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் டக்வத் லூயிஸ் முறைக்கமைய இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பல்லேகலையில் இடம்பெற்ற இந்த போட்டியின் ஆரம்பம் முதலே மழை குறுக்கிட்டது. இதனால் போட்டியின் நாணய சுழற்சி தாமதமாகவே இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. தொடர்ந்தும் மழை குறுக்கிட்டதால் போட்டி 39 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்று கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தசுன் சானக 65 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தென்னாபிரிக்க அணி தமது வெற்றியை நோக்கி துடுப்பாட ஆரம்பித்த வேளை, மீண்டும் மழைக் குறுக்கிட்டது.

இந்தநிலையில், தென்னாபிரிக்கா அணிக்கு டக்வத் லூயிஸ் முறைப்படி 21 ஓவர்களில் 191 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் 21 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தென்னாபிரிக்கா அணி தோல்வியை தழுவியது.

Related posts: