4 ஆவது தடைவையாகவும் பெலென்டோ விருதினை சுவீகரி்த்துக் கொண்டார் ரொனால்டோ!

Tuesday, December 13th, 2016

 

போர்த்துக்கல் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவ்வாண்டுக்கான பெலென்டோ விருதுக்கு பாத்திரமானார். இவர் இந்த விருதினை வென்றுள்ள நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த பெலென்டோ விருது வழங்கும் விழா ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நேற்று (12) நடைபெற்றது.

விருது வழங்கும் விழாவில் பலரது எதிர்பாரப்புகளுக்கு மத்தியில் வருடத்தின் திறமையான கால்பந்தாட்ட வீரருக்கான விருதினை போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுக்கொண்டார்.

அவர் இதற்கு முன்னர் 2008, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான 3 பெலலென்டோ விருதுகளை பெற்றுள்ளார். நான்காவது முறையாகவும் இந்த விருதினை வெல்ல வேண்டுமென்ற கனவு நனவாகியுள்ளமையை இட்டு தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

போர்த்துக்கல் தேசிய அணி மற்றும் ரியல் மெட்ரிட் ஆகிய அணிகளில் அங்கத்தவர் என்ற ரீதியில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதுடன் பெருமிதம் கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ இவ்வாண்டில் நடைபெற்ற தேசிய மற்றும் கழக மட்டத்திலான 54 ஆவது கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி 51 கோல்களை போட்டுள்ளார்.

வருடத்தின் கால்பந்தாட்ட போட்டிகளில் வீரர்கள் வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையிலேயே பெலென்டோ விருது வழங்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

92943218_ronaldo

Related posts: