39 தொடர் வெற்றி: ரியல் மாட்ரிட் அணி சாதனை!

Sunday, January 8th, 2017

ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து களகங்களில் முன்னணி வகிக்கும் அணிகளான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் என இரு அணிகளும் ஒன்றை ஒன்று சளைத்தது அல்ல என்பதை அடிக்கடி நிரூபித்துவருகின்றன.

சமீபத்தில் பார்சிலோனா அணி தொடர்ந்து 39 போட்டிகளில் தோல்வியை தழுவாமல் வெற்றியை பெற்று சாதனைப் படைத்திருந்தது.

இந்த மாபெரும் சாதனையை இதுவரை எந்த கிளப் அணியும் எட்டிக்கூட பார்க்கவில்லை. இந்நிலையில், ஷிடேனின் ஷிடேன் ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு அந்த அணி அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.

அதிலும், ரொனால்டோ, பென்சிமா, மார்சிலோ மற்றும் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி வெற்றிகளை பெற்று வருகிறது.

இதன் வரிசையில், நேற்று லா லகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி கிரனாடா அணியை எதிர்கொண்டு அபாரமாக ஆடி 5-0 என்ற புள்ளிகளை பெற்று வெற்றியை வசமாக்கியது.

இதன்மூலம் தொடர்ச்சியாக 39 போட்டிகளில் ரியல் மாட்ரிட் தோல்வியை சந்திக்காமல் வெற்றியின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. மேலும், இதுவரை எந்த கிளப் அணிகளும் முறியடிக்க முடியமல் இருந்த பார்சிலோனாவின் தொடர் வெற்றியையும் தற்போது சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1

Related posts: