32 ஓட்டங்களினால் முன்னிலையில் அவுஸ்திரேலிய அணி!

Saturday, March 9th, 2019

இந்திய அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 32 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

ராஞ்சியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 5 விக்கட்டுக்களை இழந்து 313 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ஸ் 93 ஓட்டங்களைளும், உஷ்மான் கவாஜா 104 ஓட்டங்களையும் பெற்று முதல் விக்கட்டுக்காக 193 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்தனர்.

104 ஓட்டங்களைப் பெற்ற உஸ்மான் கவாஜா ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் தமது கன்னி சதத்தை பதிவுசெய்தார்.

இந்த நிலையில், 314 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 48.2 ஓவர்களில் 281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்திய அணித் தலைவர் விராட் கோலி 123 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இதனூடாக அவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் 41 ஆவது சதத்தை பதிவுசெய்தார்.

Related posts: