30 ஓவர் போட்டித் தரப்படுத்தல் – திருநெல்வேலி சி.சி அணி முதலிடம்!

IMG_6279 Thursday, December 7th, 2017

ஜோர்ஜ் வெப்ஸ்ரார் வெற்றிக் கிண்ணத்திற்காக யாழ்.சென்றல் விளையாட்டுக் கழகம் 2010 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 8 வருடங்களாக நடத்திவரும் யாழ்.நகரில் சிறந்த கழக அணித் தெரிவு நிகழ்வில் 30 ஓவர் போட்டியில் 01.01.2017 தொடக்கம் 30.11.2017 வரை 30 போட்டிகள் நடைபெற்றன.

விக்ரம் – ராஜன் – கங்கு சுற்றுப்போட்டியில் 6 போட்டிகளும் கே.சி.சி. வெற்றிக் கிண்ணத்திற்கான சுற்றுப் போட்டியில் 24 போட்டிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அவற்றிற்கு வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணி 7 போட்டிகளில் பங்குபற்றி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 34.98 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்திலும் யாழ்.ஜொனியன்ஸ் அணி 4 போட்டிகளிலும் பங்குபற்றி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 27.44 புள்ளிகளைப் பெற்று 2 ஆம் இடத்திலுள்ள ஸ்ரான்லி அணி 5 போட்டிகளில் பங்குபற்றி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 25.45 புள்ளிகளைப் பெற்று 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.

ஏனைய கழகங்களின் நிலை வருமாறு;

கே.சி.சி.சி. 22.60, யாழ்.பல்கலைக்கழகம் 20.60, ஜொலிஸ்ரார் 19.22, சென்றலைட்ஸ் 18.70, கிறாஸ்கொப்பர்ஸ் 15.08, அரியாலை சென்றல் 12.20, நியூ ஸ்ரார் 8.73, ஸ்கந்தாஸ்ரார் 8.38, யாழ்.சென்றல் 8.12, மூளாய் விக்டோறி 8.03, றெயின்போ 2.78, சிறிகாமாட்சி 2.54, விங்ஸ் 2.54, ஓல்ட்கோல்ஸ் 2.50, யூனயன்ஸ் 2.49, திருநெல்வேலி YMHA2.27, மானிப்பாய் பரீஸ் 2.12, பற்றீசியன்ஸ் 2.09, டிறிபேக் ஸ்ரார் 1.69, டிறைற் ரோன் 1.68 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.