3 வது டெஸ்டில் இருந்து ஷிகர் தவான் விலகல்!

Monday, October 3rd, 2016

கொல்கத்தா டெஸ்டில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்தார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய பவுன்சர் பந்து ஒன்று, தவானின் இடது கையை பலமாக பதம் பார்த்தது. பெரவிரலில் பந்து தாக்கியதில் வலியால் துடித்தார். இருப்பினும் சமாளித்து விளையாடிய அவர் 17 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் காயத்தன்மை குறித்து அறிய அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இந்த பரிசோதனையின் முடிவின் படி ஷிகர் தவான் 10-15 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால், நியூசிலாந்துக்கு எதிராக வரும் 8 ஆம் தேதி இந்தூரில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவான் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவானுக்கு பதிலாக மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் காயம் காரணமாக விலகியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ள கவுதமர் கம்பீர் அடுத்த போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார் என தெரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்காக கவுதம் கம்பீர் விளையாடவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Shikhar-Dhawan-7630-720x480

Related posts: