3 ஆவது ஒரு நாள் போட்டிக்காக இலங்கை அணியில் சில மாற்றங்கள்!

Monday, January 7th, 2019

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நாளை(08) இடம்பெறவுள்ள 03ஆவது ஒருநாள் போட்டியில் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக விளையாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இலங்கை அணிக்கு அசேல குணரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோருக்கு பதிலாக தசுன் ஷானக மற்றும் துஷ்மந்த சமீர இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அவ்வாறே, நாளைய போட்டியானது குசல் மென்டிஸ் இற்கு மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படுகின்றது. அது அவர் 18 மாதங்களாக ஒருநாள் போட்டிகளில் மந்தமாகவே விளையாடி இருந்தார். ஒருநாள் போட்டிகள் 25 இல் அவர் இதுவரையில் ஒரு அரைச் சதமே விளாசி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: