291 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை அணி!

Saturday, July 29th, 2017

காலே டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 291 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்ககளையும் இழந்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நடைப்பெற்று வரும் நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ஓட்டங்கள் குவித்தது.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களை சேர்த்தது.மேத்யூஸ் 54 ஓட்டங்களுடனும், பெரேரா 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைப்பெற்றது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூஸ் 83 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடிய பெரேரா அரைசதம் அடித்தார். ஆனால் பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட்டானதால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 291 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெரேரா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.309 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

Related posts: