29ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இம்மாத இறுதியில் ஆரம்பம்!
Saturday, September 23rd, 2017
நாட்டின் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 29ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தலைமையில் நடைபெறவுள்ளது.
11 வருடங்களின் பின்னர் அனுராதபுரம் வட மத்திய மாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த விளையாட்டுப்போட்டியில் 3000 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
20 வயதிற்கு உட்பட்ட மற்றும் 20 வயதிற்கு மேற்பட்ட 2 போட்டி பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ள இவ் விளையாட்டு விழாவில் தடகள போட்டிகளாக 64 போட்டி பிரிவுகளின் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.விளையாட்டு விழாவின் இறுதிநிகழ்வில் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிசன்இ சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது .இவ்விளையாட்டு விழாவின் போது அனுராதபுர சல்காது விளையாட்டு மைதானத்தில் ‘யுத்மேளா’ கல்வி வர்த்தகக் கண்காட்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|