23 ஓட்டங்களில் சுருண்டது நேபாளம் – இலங்கை அணி இலகு வெற்றி!

ஆசியக்கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆசியக்கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் நேபாள்- இலங்கை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நேபாள் அணி மோசமாக விளையாடியது.
16.2 ஓவரிலே வெறும் 23 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக ஜோட்டி பாண்டே மட்டும் 16 ஓட்டங்கள் எடுத்தார். 7 துடுப்பாட்ட வீரர்கள் டக்- அவுட்டாகினர். இலங்கை அணி தரப்பில், சுகந்திக குமாரி, ரணவீரா ஆகியோர்கள் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4.3 ஓவரிலே 2 விக்கெட் இழந்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. அணித்தலைவி ஹாசினி பெரேரா 14 ஓட்டங்களுடனும், திலினி சுரனிகா 1 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஏற்கனவே இலங்கை அணி பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
Related posts:
|
|