21 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி வெற்றி!

Saturday, January 5th, 2019

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட் இழப்புக்கு 319 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அந்த அணி சார்பாக முன்ரோ 87 ஓட்டங்களையும், டெய்லர் 90 ஓட்டங்களையும் பெற்றனர்.

லசித் மாலிங்க 45 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக திசர பெரேரா 140 ஓட்டங்களையும், குணதிலக 71 ஓட்டங்களையும் பெற்றனர்.

Related posts: