21 ஆண்டுகளாக பார்சிலோனா அணியுடனான பயணத்தை முடித்துக்கொண்ட மெஸ்ஸி உருக்கம்!

Monday, August 9th, 2021

21 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக களமிறங்கிய நட்சத்திர கால்பந்து ஆட்டக்காரர் மெஸ்ஸி, அந்த அணியில் இருந்து விலகுவதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

13 வயது சிறுவனாக பார்சிலோனா அணியில் இணைந்த மெஸ்ஸி அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி, கால்பந்து வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வீரராக வலம் வந்தார்.

மெஸ்ஸிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதால் பார்சிலோனா நிர்வாகம் அவரது ஒப்பந்த காலத்தை நீட்டிக்க முன்வரவில்லை. வாழ்நாளில் பெரும்பகுதி பார்சிலோனாவிற்காக விளையாடிய நிலையில் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை தான் எதிர்பார்க்கவில்லை என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மெஸ்ஸி கண்ணீருடன் தெரிவித்தார்.

கூடியிருந்த சக வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர்கள் நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பி மெஸ்ஸிக்கு பிரியாவிடை அளித்தனர்.

Related posts: