2024 ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டு திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிய வேண்டும் – இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் வலியுறுத்தல்!

Saturday, February 11th, 2017

நாடு முழுவதும் உள்ள திறமை யான விளையாட்டு வீரர்களை கண்டறிய வேண்டும் என இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் வி.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியாத நிலை உள்ளது. விளையாட்டுத் துறையில் உள்ள குறைகளைப் பற்றி மட்டுமே கூறிக் கொண்டி ருக்காமல், அவற்றைத் தீர்ப்பதற் கான முயற்சிகளை அனைத்து தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும். இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்தி நல்ல முடிவுகள், திட்டங்களைக் கண்டறிந்து அவற்றைச் செயல்படுத்த வேண்டும். நாடு முழுவதும் உள்ள திறமையான வீரர்களைக் கண்டறிந்து, அவர்களை வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அத்துடன் களத்தில் விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், வல்லுநர்கள் இணைந்து முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு, வெற்றிக்கு வழிகாண வேண்டும்.

யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம். ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும். அவர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தினால் அவர் சிறந்த வீரராக விளங்குவார். தடைகளைத் தாண்டி வெற்றி பெறவும் முடியும். வரும் 2020-ல் இல்லாவிட்டாலும், 2024-ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களைப் பெறுவதை இலக்காகக் கொண்டாவது செயல்பட வேண்டும். என்றார்.

indian_hoc

Related posts: