2021 டி20 உலகக் கிண்ணம் – ஐசிசி அறிவிப்பு!
Sunday, August 9th, 20202021 டி 20 உலகக் கிண்ணம் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கிண்ணம் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கிண்ணம் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதனால் 2022 டி20 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 2023 இல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கிண்ணம் நடைபெறவுள்ளது.
அடுத்த வருடம் இந்தியாவில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கிண்ணம் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 14 அன்று நடைபெறும். 2022 இல் அவுஸ்திரேலியாவில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கிண்ணம் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 13 அன்று நடைபெறும்.
Related posts:
|
|