2020ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்துக்கான சின்னம் உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் 4 ஆண்டுகளுக்கொருமுறை இடம்பெறும் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளுக்கான சின்னம் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்ததாக கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய கொண்டாட்டமான இந்த போட்டிகளின் இறுதி போட்டி 2020 இல் லண்டனில் இடம்பெறவுள்ளது.அரை இறுதி, இறுதி போட்டி ஆகியன லண்டன் மாநகரில் இடம்பெறவுள்ள அதேவேளை, ஐரோப்பாவின் 13 நகரங்களில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பிய கிண்ண தொடரின் 60 ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் முகமாக இந்தப் போட்டிகள் வெகுவிமரிசையாக இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. லண்டன் மாநகர மேயர் சாதிக் கான் மற்றும் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக அண்மையில் தேர்வாகிய அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
போட்டிக்கான சின்னம் மற்றும் போட்டியின் காலத்தை கணக்கிடும் நாட்காட்டி குறி (Count Down) ஆகியன இணையத்தின் காட்ச்சிப்படுத்தலும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டில் 24 நாடுகளுக்கிடையில் பிரான்ஸ் நாட்டில் நிறைவுக்கு வந்த ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை 1-−0 என்று தோற்கடித்த போர்த்துக்கல் அணி கிண்ணம் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|