2019 உலகக் கிண்ணம் – IPL ஐ புறக்கணிக்கிறார் மலிங்க?

Monday, December 24th, 2018

இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 கிரிக்கெட் அணியின் தலைவரான வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்திய பிரீமியர் லீக் இருபதுக்கு -20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியினால் லசித் மலிங்க ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தார்.

எனினும், குறித்த அணியுடன் மாலிங்க ஒப்பந்தங்கள் எதுவும் கைச்சாத்திட்டதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிக்கு முன்னதாக ஐ.பி.எல் போட்டிகள் இடம்பெறவுள்ளமையினால் உபாதைக்கு உள்ளாகியிருந்தால் உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை தோன்றும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போது தனக்கு வழங்கப்பட்டுள்ள தலைமைப் பதவிக்கு மதிப்பளித்து அநேகமாக லசித் மலிங்க ஐ.பி.எல் போட்டிகளை புறக்கணிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: