2018 உலக கிண்ண கால்பந்திலிருந்து இங்கிலாந்து வெளியேற்றப்படும் அபாயம்!

Monday, February 6th, 2017

2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டியிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்நாட்டு பாராளுமன்றத்தின் முடிவால் இங்கிலாந்து அணிக்கு அனுமதி மறுக்கப்படலாம் என நாட்டில் உள்ள முன்னணி கால்பந்து வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு கீழ்சபையில் இங்கிலாந்து கால்பந்து நிர்வாக அமைப்பு மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது பிபா விதிகளை மீறி செயல்பட வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் கால்பந்து அமைப்பில் அரசியில் குறுக்கீடு உள்ள பல நாடுகள், பிபாவால் சர்வதேச போட்டியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது நினைவுக்கூரத்தக்கது. தற்போது 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டிகளுக்கு தகுதிக் குழுவில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால், பாராளுமன்ற வாக்கெடுப்பில் கால்பந்து அமைப்பை சீரமைக்க வேண்டும் என்ற முடிவு வந்தால் இங்கிலாந்து கால்பந்து அணியின் முயற்சி அனைத்தும் வீணாகிவிடும்.

England460x276

Related posts: