200 மீற்றர் ஒட்டத்தில் உசைன் போல்ட் வெற்றி!

Sunday, July 24th, 2016

லண்டன் டயமண்ட் லீக் போட்டிகளில் 200 மீற்றர் ஓட்டத்தில் உலகில் அதிக வேக ஓட்டவீரரான உசைன் போல்ட் வெற்றிபெற்றார்.

லண்டன் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 19 தசம் 89 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்த உசைன் போல்ட், முதலாவது இடத்தைப் பெற்றார்.

0 தசம் 15 செக்கன்கள் பின்னிலை பெற்ற பனாமாவின் அலோன்சோ எட்வேட் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பொதுநலவாய போட்டிகளில் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்ற பிரித்தானியாவின் அடம் ஜெமிலி 20 தசம் 07 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்து மூன்றாவது இடத்தை பெற்றார்.

உபாதை காரணமாக இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற ஒத்திகை ஓட்டங்களில் உசைன் போல்ட் பங்குபற்றாத நிலையில்,   அவர் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட உடற்தகுதி பெறுவது குறித்து சந்தேகம் எழுத்திருந்தது.

எவ்வாறாயினும் லண்டன் டயமண்ட் லீக் போட்டிகளில் பங்கேற்று முதலிடத்தை பெற்றதன் மூலம் தனது உடற்தகுதியை உசைன் போல்ட் நிரூபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: