20 வருடங்களுக்கு பின் இலங்கை வீராங்கனை சாதனை!

இலங்கை – பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் இலங்கை வீராங்கனை ஓஷதி ரணசிங்க 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
கடந்த 20 வருடங்களில் மகளிருக்கான ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் இலங்கை வீராங்கனை ஒருவர் 5 விக்கெட் வீழ்த்தியமை இதுவே முதல் தடவை என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை மகளிருக்கான ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை வீராங்கனை ஒருவர் 5 விக்கெட்களை வீழ்த்தியமை இது 3ஆவது தடவையாகும்.
ஓஷதி ரணசிங்க சிறப்பாட்டக்காரர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.
முன்பதாக 2002ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் சுதர்ஷினி சிவானந்தன் 2 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
2003ஆம் மார்ச்சில், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக சந்தமாலி தோலவத்த 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அதன்பின் 20 வருடங்கள் கடந்த நிலையில் இலங்கை சார்பில் ஓஷதி ரணசிங்க 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|