20 க்கு 20 : தகுதிகாண் போட்டியில் நைஜீரியா !

Tuesday, October 8th, 2019

உலக கிண்ண ஆண்களுக்கான 20 க்கு 20 கிரிக்கட் தகுதிகான் போட்டிக்கு சிம்பாவே அணிக்கு பதிலாக நைஜீரிய கிரிக்கட் அணி தகுதி பெற்றுள்ளது.

சிம்பாவே கிரிக்கட்டில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரிவித்து சர்வதேச கிரிக்கட் பேரவையினால் அந்த அணிக்கு தடை  விதிக்கப்பட்டது.

இதனையடுத்து அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண 20 க்கு 20 க்கு போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை சிம்பாவே அணி இழந்தது.

இந்தநிலையில் ஆண்களுக்கான 20க்கு 20 முதல் தகுதிகான் போட்டிகளுக்கு Nigeria, UAE, Hong Kong, Ireland, Jersey, Kenya, Namibia, Netherlands, Oman, Papua New Guinea, Scotland, Singapore ஆகிய அணிகள் தெரிவாகியுள்ளன.

இதேவேளை மகளிருக்கான 20 க்கு 20 தகுதிகான் போட்டியில் சிம்பாவேக்கு பதிலாக நபீபியா (யேஅiடியை) அணி தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: