2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி!

மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 18 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 443 ஓட்டங்கள் குவித்தது. அசார் அலி இரட்டை சதம் (205 ஓட்டங்கள்) அடித்தார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய அவுஸ்திரேலியா 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 465 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. தலைவர் சுமித் 100 ஓட்டமும், ஸ்டார்க் 7 ஓட்டமுமு எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. அவுஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 624 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஸ்மித் 165 ஓட்டமும் ஆட்டம் இழக்காமல் இருந்தார். சோகைல்கான், யாசிர் ஷா தலா 3 விக்கெட்டும், வகாப் ரியாஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இதையடுத்து 181 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 89 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது. சமி அஸ்லம் (2 ஓட்டங்கள்) ஹாசல்வுட் பந்திலும், பாபர் ஆசாம் (3ஓட்டங்கள்), மற்றும் ஸ்டார்க் ஆட்டம் இழந்தனர். லயன் பந்தில் யூனுஸ்கான் (24), கேப்டன் மிஸ்பா (0), ஆசாத் சபீக் (16) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.
இப்படியே போனால் இன்னிங்ஸ் தோல்வி நிச்சயம் என்ற நிலையில், இந்த மோசமான தோல்வியை தவிர்க்க அசார் அலி, சர்பிராஸ் அகமது இருவரும் போராடினர். ஆனால், அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. அவர்கள் தலா 43 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். கடைசி இரண்டு வீரர்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க, பாகிஸ்தான் அணி 163 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதனால், அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணி 2–0 என முன்னிலையில் உள்ளது.
Related posts:
|
|